பொதுப் படுகடன்/அரச கடன் என்பதன் பொதுவான புரிதலானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய அரசாங்கத்தின் கடனின் பங்கு ஆகும். இது குறித்த தரவுகளை 1950 களிலிருந்தே காணலாம். Historical-Government-Debt,-1950-to-2021 )
எனினும் பொது நிறுவனங்களின் கடனையும் உள்ளடக்குவதால் அரசாங்கத்தின் உண்மையான கடன் மத்திய அரசாங்கத்தின் கடனை விட அதிகமாகும். 2020 ஆம் ஆண்டில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மற்றுமொரு கூறு பன்னாட்டு முறிகளின் கடன்களுக்கான எஞ்சிய முகப்பெறுமதி ஆகும். பொதுத் துறை நிறுவனங்களின் கடன், பன்னாட்டு முறிகளின் கடன்களுக்கான முகப்பெறுமதி ஆகிய இரண்டையும் சேர்த்தால் அரசாங்கத்தின் மொத்தக் கடன் 2020 ஆம் ஆண்டில் மொ.உ.உற்பத்தியில் 112.4 சதவீதமாக அதிகரிக்கிறது.
பொது நிறுவனங்களின் கடன்
மொத்தக் கடனில் பொது நிறுவனங்களின் கடனைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால் அரசாங்கத்தின் ஐந்தொகையிலிருந்து கடன்கள் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் ஐந்தொகைக்கும் அங்கிருந்து இங்கும் மாற்றப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக மத்திய அரசாங்கத்தின் சில கடன்களை 2014 ஆம் ஆண்டில் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் ஐந்தொகைக்கு அரசாங்கம் மாற்றியது. : 3 Problems on Debt Numbers Navigating Sri Lanka's Debt: Better reporting can help – a case study on China debt )
2020 ஆம் ஆண்டில் இந்தப் பொது நிறுவனங்களின் மொத்தக்கடன் ரூ.1,309 பில்லியன் அல்லது மொ.உ.உற்பத்தியின் 8.7% ஆகும். பொது நிறுவனங்களின் கடனையும் மத்திய அரசாங்கத்தின் கடனுடன் சேர்த்தால் மொத்தப் பொதுப் படுகடன் மொ.உ.உற்பத்தியின் 109.7% ஆகும்.
பன்னாட்டு முறிகளின் (ISB) எஞ்சிய முகப்பெறுமதி
2020 ஆம் ஆண்டுக்கான பன்னாட்டு முறிகளுக்கான கடன்களின் மொத்தப் பெறுமதி இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையின் பிரகாரம் ரூ.2,212 பில்லியன். இதில் ரூ.416 பில்லியன் உள்நாட்டுக் கடன் என அறிக்கையிடப்பட்டுள்ளது. எனினும் இந்தப் பெறுமதி ஏட்டுப் பெறுமதி/சந்தைப் பெறுமதியில் அறிக்கையிடப்பட்டுள்ளது. சந்தையில் பன்னாட்டு முறிகளின் விலைகளுக்கு ஏற்றவாறு கடனின் பெறுமதி மாறும் என்பதே இதன் அர்த்தம். கிரெடிட் ரேட்டிங் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து 2020ல் இலங்கையின் பன்னாட்டு முறிகளின் பெறுமதி குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தது.
பன்னாட்டு முறிகள் சந்தைப் பெறுமதியில் பதிவு செய்யப்பட்டுள்ளபோதும், முதிர்ச்சிக் காலத்தின் இறுதியில் அரசாங்கம் பன்னாட்டு முறிகளின் சந்தைப் பெறுமதியை அன்றி முகப்புப் பெறுமதியையே திருப்பிச் செலுத்துகிறது. சந்தையில் நடப்பு விலையில் பன்னாட்டு முறிகளை அரசாங்கம் திருப்பி வாங்க முடிந்தால் சந்தைப் பெறுமதியைச் செலுத்தலாம். ஆனால் நிலுவையிலுள்ள மொத்த பன்னாட்டு முறிகளைக் கொள்வனவு செய்வதற்கு இருப்புகளோ பிற நிதி ஆதாரங்களோ இல்லாத நிலையில் இது சாத்தியமில்லை. ஆகவே அரசாங்கத்தால் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய உண்மையான கடன் பன்னாட்டு முறிகளின் முகப்புப் பெறுமதி ஆகும். இது அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்தக் கடன்களின் பெறுமதியை 2020 ஆம் ஆண்டில் ரூ.408 பில்லியனால் (மொ.உ.உற்பத்தியின் 2.7 சதவீதத்திற்கு சமமானது) அதிகரிக்கிறது. இதன் விளைவாக அரசாங்கத்தின் மொத்தக் கடன் 2020 ஆம் ஆண்டில் மொ.உ.உற்பத்தியின் 112.4 சதவீதமாக அதிகரிக்கிறது.