-
தொடரும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சவாலை இலங்கை எதிர்கொள்கிறது. இந்தப் பின்னணிக் குறிப்பு, தற்போதைய நெருக்கடியிலிருந்து பொருளாதாரம் மற்றும் நாடு முன்பை விட வலுவாகவும் மீள்தன்மையுடனும் வெளிப்படுவதற்கு முக்கியமான நான்கு நன்மைகளை உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு (DDR) வழங்குவதாக வாதிடுகிறது. முதலாவதாக, DDR ஆனது இலங்கை அரசாங்கத்திற்கான கடனைத் தீர்க்கும் பாதையை வழங்குகிறது. இரண்டாவதாக, பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு (பேரின பொருளாதார ஸ்திரத்தன்மை) அடித்தளத்தை வழங்குகிறது. மூன்றாவதாக, அது தொடர்ச்சியான இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு தேவைப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது, மேலும் நான்காவதாக, நெருக்கடியின் செலவுகளின் சுமையை சமமாகப் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.