2024 டிசம்பர் 05 ஆம் திகதியன்று, அரசாங்கம் ஆண்டிற்கான 219.4 பில்லியன் ரூபா பெறுமதிமிக்க குறைநிரப்பு மதிப்பீடுகளை முன்வைத்தது, இது 2024 ஆம் ஆண்டின் அசல் வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. எதிர்பாராத அவசரகால செலவுகளை நிவர்த்தி செய்ய அல்லது தற்போதுள்ள ஒதுக்கீடுகளின் வகைப்படுத்தலை சீராக்க குறைநிரப்பு ஒதுக்கீடுகள் பொதுவாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. மேலதிக புதிய செலவினங்கள் இருந்தபோதிலும், 2024 வரவுசெலவுத் திட்டத்தில் நிறுவப்பட்ட செலவு மற்றும் கடன் வரம்புகளுக்குள் தாம் கட்டப்பட்டு இருப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
நிதியுதவியின் கணிசமான பகுதி - ரூ .188.9 பில்லியன் (86%) - அரசாங்கத்தின் சொந்த வளங்களிலிருந்து கிடைக்கப் பெறுகிறது, அதே நேரத்தில் மீதமுள்ள 30.5 பில்லியன் ரூபா (14%) வெளிநாட்டு நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. இதில் 130 பில்லியன் ரூபா இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கடனுக்கான வட்டி மானியத்தை ஈடுகட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த ஒதுக்கீடு, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கடன் மறுசீரமைப்பால் பாதிக்கப்பட்ட வங்கிகளை மீள் மூலதனமாக்க முன்னர் பயன்படுத்தப்பட்ட 450 பில்லியன் ரூபாவிலிருந்து வட்டி இழப்பு கூறுகளை மறுவகைப்படுத்துவதைக் இவ் ஒதுக்கீடு பிரதிபலிக்கிறது.
அட்டவணை 1: ஒதுக்கப்பட்ட முகவர் நிலையம் உட்பட அனைத்து குறைநிரப்பு ஒதுக்கீடுகளினதும் விபரங்கள்.
# |
குறைநிரப்பு ஒதுக்கீடு |
முகவர் நிலையம் |
மதிப்பீடு (மில்லியன் ரூபா) |
1 |
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கடன் மறுசீரமைப்புக்காக வட்டி மானியங்களை செலுத்துவதற்கான அரசாங்க முயற்சிகள் |
அரச தொழில் முயற்சிகள் திணைக்களம் |
130,000 |
2 |
மூத்த பிரஜைகளின் சேமிப்புக்கான கூடுதல் வட்டி செலவுகளை ஈடுகட்ட வங்கிகளுக்கு உதவுதல் |
அபிவிருத்தி நிதித் திணைக்களம் |
32,641 |
3 |
இலங்கை ரூபாய் வலுவடைந்ததன் காரணமாக டொலர் கணக்குகளில் ஏற்பட்ட பரிமாற்ற இழப்புகளை ஈடுகட்ட திறைசேரி நடவடிக்கைகளுக்காக |
திறைசேரித் தொழிற்பாடுகள் திணைக்களம் |
18,000 |
4 |
சுகாதாரத் துறை தேவைகள், எரிபொருள் மற்றும் சுங்க வரி செலுத்துதல் செலுத்துதல்களுக்காக ஜப்பானிய நன்கொடை |
சுகாதார அமைச்சு |
10,826 |
5 |
பாடசாலை சீருடை துணியின் செலவை ஈடுகட்டுவதற்க்காக சீனாவால் வழங்கப்பட்ட நன்கொடை |
கல்வி அமைச்சு |
9,829 |
6 |
அமெரிக்காவால் இரண்டு விமானங்களின் மதிப்பு மற்றும் அது தொடர்பான வரிகளை ஈடுகட்ட விமானப்படைக்கு வழங்கிய நன்கொடை |
இலங்கை விமானப்படை |
8,331 |
7 |
கடன் மறுசீரமைப்பு ஆலோசகர்களுக்காக வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகளை மீள் செலுத்துவதற்காக அமைச்சுக்கு வழங்கப்படும் நிதி. |
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு |
3,213 |
8 |
பாடசாலை சத்துணவு திட்டத்திற்கான தினசரி உதவி கொடுப்பனவை 85 ரூபாவிலிருந்து 110 ரூபாவாக உயர்த்துதல். |
கல்வி அமைச்சு |
1,800 |
9 |
சீனாவின் உதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிறிய அளவிலான மீனவர்களை ஆதரித்தல் |
கடற்றொழில் அமைச்சு |
1,533 |
10 |
ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகளை அதிகரித்தல். |
ஓய்வூதியத் திணைக்களம் செயல்பாட்டு நடவடிக்கைகள் |
1,400 |
11 |
அதிகரித்து வரும் உணவுச் செலவுகள் மற்றும் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவற்றுக்கு தீர்வு காணுதல் |
சிறைச்சாலைகள் திணைக்களம் |
1,400 |
12 |
இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த சொத்துக்களை புனரமைப்பதற்கான இழப்பீட்டை பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கும் நிதியை அதிகரித்தல். |
பாதுகாப்பு அமைச்சு |
400 |
மொத்தம்
|
|
219,373 |
மூலம்-
அரசாங்க தகவல் திணைக்களம், இலங்கை 'அமைச்சரவை முடிவுகள் - 2024 நவம்பர் 25 https://www.dgi.gov.lk/news/cabinet-decisions/4714-cabinet-decisions-25-11-2024 [18 டிசம்பர் 2024 ஆம் திகதி இறுதியாக அணுகப்பட்டது].
இலங்கை பாராளுமன்றம் 'பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரம் – 2024 டிசம்பர் 4 https://parliament.lk/uploads/documents/orderpapers/1733334762034758.pdf [18 டிசம்பர் 2024 ஆம் திகதி இறுதியாக அணுகப்பட்டது].
ஆராய்ச்சி: இமாத் ரிஸ்வான் & அனுஷன் கபிலன்
காட்சிப்படுத்தல் : சதினி கல்ஹேன