ஜெனரல்
-
data-chart
இலங்கை அதன் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு எவ்வளவு செலவிடுகிறது?

வெளிநாட்டுத் தூதரகங்களுக்கான இலங்கையின் செலவு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதில் 50 சதவீதமான செலவுகள் வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் ஊதியங்களுக்காகச் செலவிடப்படுகிறது. ஊதியச் செலவினங்களில் தூதரக உத்தியோகத்தர்களின் சம்பளங்களும் வேதனங்களும், மேலதிகப் பணி மற்றும் விடுமுறைக் கொடுப்பனவுகள், பிற கொடுப்பனவுகள் என்பன அடங்குகின்றன.

தெற்காசிய அண்டை நாடுகள் வெளிநாட்டுத் தூதரகங்களுக்காகச் செலவிடும் தொகையுடன் ஒப்பிடும்போது இலங்கையின் செலவுகள் எவ்வாறு உள்ளன?

ஒரு நாட்டின் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கான செலவுகள், குறைந்த பட்சம் தெற்காசிய நாடுகளைக் கவனத்தில் கொள்ளும்போது, சனத்தொகை மற்றும் அதன் பரப்பளவு ஆகியவற்றில் அது எவ்வளவு பெரியது என்பதில் தங்கியுள்ளதைத் தரவு காட்டுகிறது. சனத்தொகை மற்றும் நாட்டின் பரப்பளவு ஆகியவை பிற நாடுகளில் பராமரிக்கப்பட வேண்டிய வெளிநாட்டுத் தூதரகங்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கான இலங்கையின் செலவுகள் குறைவாக உள்ளன.

2021-04-23
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்