-
கோவிட் – 19 பெருந்தொற்றில் இருந்து இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSC - Social Security Contribution) 2022ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. ரூ.120 மில்லியனை விட அதிகமான ஆண்டு வருமானம் மீது சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி 2.5% அறவிடப்படும். இந்த வரியை ஏப்ரல் 2022 முதல் நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவின் மூலம் ரூ140 பில்லியனைப் பெறமுடியும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது. எனினும் இந்தப் பெறுமதி மிகை மதிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதல் விபரங்களுக்கு 2022 வரவு செலவுத்திட்டம் மீதான பொது அறிக்கையைப் பார்க்கவும்.