2021ம் ஆண்டு இறுதியில் இலங்கையின் நிலுவையிலுள்ள அரச கடன் ரூ.17,873 பில்லியன் (மொ.உ.உற்பத்தியில் 105%). 2022ன் முதல் காலாண்டில் நிலுவையிலுள்ள அரசாங்கத்தின் மொத்தக் கடன் ரூ.21,697 பில்லியனாக அதிகரித்தது.
நிலுவையிலுள்ள அரசாங்கத்தின் மொத்தக் கடனில் வெளிநாட்டுக் கடனின் சதவீதம் 2021 இறுதியில் 37 சதவீதத்தில் இருந்து 2022ன் முதல் காலாண்டில் 47 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த தசாப்தத்தில் நிலுவையிலுள்ள அரசாங்கத்தின் மொத்தக் கடனில் சராசரியாக உள்நாட்டுக் கடன் 56 சதவீதமாகவும் வெளிநாட்டுக் கடன் 44 சதவீதமாகவும் இருந்தது.
மார்ச் 2022ல் செலாவணி வீதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை அடுத்து, 2022 பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை நாட்டின் வெளிநாட்டுக் கடனின் ரூபாய் மதிப்பு 68 சதவீதத்தால் உயர்ந்துள்ளது. நிலுவையிலுள்ள அரசாங்கத்தின் மொத்தக் கடனில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புக்கு இதுவே முக்கிய பங்களித்துள்ளது.