ஜெனரல்
-
data-chart
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு காரணமாக இலங்கையின் முன்னணி ஏற்றுமதித் துறை 20% வீழ்ச்சியை எதிர்நோக்கும் அபாயத்தில் உள்ளது!

ஏப்ரல் 2 ஆம் திகதி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கு இலங்கை ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 44 சதவீத வரியை விதித்துள்ளார். 64 சதவீத ஆடையுற்பத்திகளை உள்ளடக்கிய இவ்வேற்றுமதிகள் 2023 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியைக் கொண்டிருந்தன. எனவே, இலங்கையின் ஆடைக் கைத்தொழில் துறையானது பாரிய தாக்கத்தை எதிர்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளுக்கும் விதிக்கப்படும் பரஸ்பர வரிகள், ஆடைகளுக்கான அமெரிக்காவின் ஒட்டுமொத்த கேள்வியை குறைக்கக்கூடும். இதன் விளைவாக, உலக வங்கியின் ஸ்மார்ட் (SMART) அடிப்படையிலான பகுதியளவு சமநிலை மாதிரியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்தப் பகுப்பாய்வானது, அமெரிக்காவிற்கு இலங்கையின் ஆடை ஏற்றுமதி அண்ணளவாக 20 சதவீதம் (ஐக்கிய அமெரிக்க டொலர் 300 மில்லியனுக்கும் அதிகமாக) குறையக்கூடும் என்பதைக் சுட்டிக் காட்டுகிறது. இதனால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் ஆடைகளுக்கான நிறையிடப்பட்ட சராசரி வரியின் 36 சதவீத அதிகரிப்பானது, இலங்கை ஆடைகளுக்கான  அமெரிக்காவின் கேள்வியின் மீது எவ்வாறான தாக்கத்தை விளைவிக்கும் என்பதை இந்த மாதிரியுரு உருவகப்படுத்தியுள்ளது.

குறிப்பு

இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவை ஆரம்ப மதிப்பீடுகள் என்பதோடு,  அதன் உண்மையான விளைவுகள் பல காரணிகளில் தங்கியுள்ளன. குறிப்பாக, போட்டித்தன்மை காரணமாகவும் இலங்கையின் ஆடையுற்பத்திகள் மேலும் இழப்பை சந்திக்க நேரிடலாம், ஏனெனில் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள 44 சதவீத ஏற்றுமதி வரியானது, பங்களாதேஷ் (37 சதவீதம்) மற்றும் இந்தியா (26 சதவீதம்) போன்ற முக்கிய போட்டியாளர்களுக்கு விதிக்கப்பட்டதை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகவே காணப்படுகிறது.

மூலம்

உலக வங்கியின் 'உலக ஒருங்கிணைந்த வர்த்தக தீர்வு (World Bank 'World Integrated Trade Solution) (WITS)'. https://wits.worldbank.org/ இல் [3 ஏப்ரல் 2025 அன்று இறுதியாக அணுகப்பட்டது].

ஆய்வை மேற்கொண்டோர்: மத்தீஷ அரங்கல மற்றும் அநூஷன் கபிலன்
காட்சிப்படுத்தல்: முஆத் ஹிமாஸ்

2025-04-03
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்