பாராளுமன்ற ஒப்புதல்களைப் பெறாத செலவினங்களுக்காக அரசாங்கம் பணத்தைச் செலவிட வேண்டியேற்படும்போது குறைநிரப்பு மதிப்பீடு உருவாக்கப்படுகிறது. அவ்வாறான செலவினங்கள் அவசர மற்றும் எதிர்பாராத செலவினங்களுக்காகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.
குறைநிரப்பு மதிப்பீடானது அரசாங்கத்தின் செலவினத்தை ரூ.695 பில்லியனால் அதிகரிக்கும். 2022ம் ஆண்டிற்கான வருமான மதிப்பீட்டையும் ரூ.2,284 இலிருந்து ரூ.1,600 ஆக நிதியமைச்சர் திருத்தியுள்ளார்.அதிகரித்துள்ள செலவினம் மற்றும் தற்போது எதிர்பார்க்கப்படும் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை ரூ.3,007 பில்லியனாக அதிகரிக்கிறது. இது அசல் மதிப்பீடான ரூ.1,628 பில்லியனின் இருந்து 43 சதவீதத்தால் உயர்ந்துள்ளதைக் காட்டுகிறது. (காட்சி 2)
மூலங்கள்
பார்வையிட: https://www.parliament.lk/news-en/view/2595