ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு மட்டும் நிதியை ஒதுக்கீடு செய்த இடைக்கால கணக்கு வாக்கெடுப்பைத் தொடர்ந்து, 2025 முழு ஆண்டிற்குமான அரச செலவினங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்யும் 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஜனவரி 9, 2025 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் முதல் அட்டவணையின் மூலம் 2025 ஆம் ஆண்டிற்கான கடன் சேவை அல்லாத செலவினங்களுக்கு அரசாங்கம் மொத்தமாக ரூ.4,218 பில்லியனை ஒதுக்கியுள்ளது. இதில் ரூ.2,898 பில்லியன் மீண்டுவரும் செலவினங்களுக்காகவும், ரூ.1,320 பில்லியன் மூலதனச் செலவினங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அதிகபட்ச ஒதுக்கீடாக ரூ.714 பில்லியனைப் பெற்றுள்ளது. 2024 ஆம் ஆண்டில் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.1,077 பில்லியனுடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க குறைப்பைக் காட்டுகின்றது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு இரண்டாவது அதிகபட்ச ஒதுக்கீடாக ரூ.508 பில்லியனைப் பெற்றுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ரூ.497 பில்லியனைப் பெற்றுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு ரூ.473 பில்லியனைப் பெற்றுள்ளதுடன் இதில் ரூ.421 பில்லியன் மூலதனச் செலவினத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாதுகாப்பு அமைச்சு ரூ.442 பில்லியனைப் பெற்றுள்ள அதேவேளை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ரூ.271 பில்லியனைப் பெற்றுள்ளது. (கல்விக்காக மிகக் குறைவாகச் செலவிடும் நாடுகளில் இலங்கைக்கு மூன்றாவது இடம்). முதல் 8 அமைச்சுக்களும் மொத்த அமைச்சுசார் ஒதுக்கீட்டில் 90% ஐப் பெற்றுள்ளன.
சட்டத்தினால் அதிகாரமளிக்கப்பட்டு திரட்டு நிதியத்தின் மீது பொறுப்பிக்கப்பட வேண்டிய அரச செலவினங்களை உள்ளடக்கிய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது அட்டவணை ரூ.4,617 பில்லியன் ஆகும். இது 2024 ஆம் ஆண்டில் ரூ.6,966 பில்லியனாகக் காணப்பட்டது.
இரண்டாவது அட்டவணையில் உள்ள செலவினங்களில் பெரும்பகுதி கடன் சேவைக் கொடுப்பனவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் வட்டிக் கொடுப்பனவுகள் ரூ.2,944 பில்லியனும் மூலதன மீள்கொடுப்பனவுகள் ரூ.1,595 பில்லியனும் அடங்கும். இவை இரண்டும் இரண்டாவது அட்டவணையின் மொத்தச் செலவினத்தில் 98% ஆக உள்ளன.
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இங்கே காணலாம்: https://publicfinance.lk/en/report/appropriationbill-final-appropriationact-2025
ஒதுக்கீடுகள் மட்டுமே இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன, இது கடன் சேவை செலவுகளைத் தவிர்த்து, பெரும்பாலான செலவினங்களை உள்ளடக்கியது
குறிப்பு: செலவின புள்ளிவிவரங்களில் கடன் சேவை செலவுகள் உள்ளடக்கப்படவில்லை.
மூலங்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2025, https://www.treasury.gov.lk/api/file/3737aed8-b53d-4996-a61b-c8fd4bd2f875
ஒதுக்கீட்டுச் சட்டம் 2024, https://www.treasury.gov.lk/api/file/fe005a51-a874-47ea-b5c2-f94e078fdb39
அங்கீகரிக்கப்பட்ட விரிவான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் 2024, நிதி அமைச்சு. https://www.treasury.gov.lk/web/2024-approved-detailed-budget-estimates
Research by: Chathuni Pabasara and Anushan Kapilan
Visualisation By: Sadini Galhena