ஜெனரல்
-
data-chart
வெரிட்டே ரிசர்ச்சின் ‘Asset Declarations Penalty Calculator’ ஐப் பயன்படுத்தி சொத்து விபரங்களை வெளியிடாததற்கான அபராதத்தைக் கணக்கிடுங்கள்

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம், அரசியல்வாதிகள் மற்றும் குறிப்பிட்ட சில பொது அதிகாரிகள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையை விதிக்கிறது. 

வருடாந்த அறிக்கையானது அந்த ஆண்டின் மார்ச் 31 ஆம் திகதிய நிலவரப்படி, அறிவிப்பாளர், அவரது மனைவி, சார்ந்திருக்கும் குழந்தைகள் (எந்த வயதினரும்), பிற சார்ந்திருக்கும் நபர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து வாழும் எவரும் வைத்திருக்கும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்த வேண்டும். இவ் அறிவிப்புகளைத் தயாரித்து சமர்ப்பிக்க வெளியீட்டாளர்களுக்கு மார்ச் 31 முதல் ஜூன் 30 வரையிலான மூன்று மாத காலம் வழங்கப்பட்டுள்ளன. 

வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளின் பட்டியல் இங்கே உள்ளது. முழு பட்டியலையும் பெற இங்கே கிளிக் செய்யவும் 

தாமதமாக சமர்ப்பித்தால் அபராதம்!! 

சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 க்குள் இந்த அறிவிப்புகளை சமர்ப்பிக்கத் தவறினால் குறிப்பிடத்தக்க நிதி அபராதம் விதிக்கப்படும்.   

சம்பந்தப்பட்ட ஆண்டு ஜூன் 30-ம் திகதிக்குள் அறிவிப்பு சமர்ப்பிக்கப்படாவிட்டால், ஜூலை 01-ம் திகதி முதல் தினசரி அபராதம் விதிக்கப்படும் . 

 ஜூலை 01 முதல் ஜூலை 31 வரை, தினசரி அபராதமானது மொத்த மாத சம்பளத்தில் மூப்பதில் ஒரு பங்காகும். ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை, தினசரி அபராதம் முந்தைய ஆறு மாதங்களுக்கு பொருந்தக்கூடிய சராசரி சம்பளத்தில் முப்பதில் ஒரு பங்காக அதிகரிக்கும். 

இவ் அபராதங்கள் வெளிப்படுத்துநரின் சம்பளத்திலிருந்து நேரடியாக கழிக்கப்பட்டு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) நிதிக்கு மாற்றப்படும். 

அபராத்தை கணக்கிடுதல் 

அபராதம் வசூலிக்கும் கட்டமைப்பின் சிக்கலான தன்மை காரணமாக, வெரிட்டே ரிசர்ச் ஒரு கால்குலேட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது, இதனூடாக தாமதமான சமர்ப்பிப்புகளுக்கான தினசரி அபராதத்தை துல்லியமாக தீர்மானிக்க முடியும்! 

உதாரணமாக, வெளிப்படுத்துநர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் கடைசியாக பெற்ற மொத்த மாத சம்பளம் ரூபா 157,952 என்று எடுத்துக்கொள்வோம். ஆனால் அவர் சொத்து விபரங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை. 

நிலுவைத் திகதியிலிருந்து ஜூலை 31 வரை தினசரி அபராதம்: 

157,952/ 30= ரூபா 5,265.07 

ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை தினசரி அபராதம் (சம்பளத்தில் மாற்றம் இல்லை என்று வைத்துக் கொள்வோம்): 

(157,952x6) / 30 = ரூபா 31, 590.40 

 

நிதி அபராதங்களைத் தாண்டி 

செப்டம்பர் 1 ஆம் திகதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறுவது இன்னும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். சட்டத்தின் பிரிவு 90 (5) இன் கீழ், செப்டம்பர் 1 ஆம் திகதிக்குள் வருடாந்த அறிவிப்பை சமர்ப்பிக்காதது ஒரு குற்றமாகும். அவ்வாறு குற்றம் நிரூபிக்கப்பட்டால், விசாரணை மற்றும் ஆணைக்குழுவின் வெற்றிகரமான வழக்குத் தொடரலுக்கு உட்படுத்தப்பட்டு அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர் அவரின் முந்தைய 12 மாத மொத்த சம்பளத்திற்கு இணையான அபராதம், ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது மேல் குறிப்பிடப்பட்ட இரண்டையும் எதிர்கொள்ள நேரிடும். 

சரியான நேரத்தில் சமர்ப்பிப்பதன் முக்கியத்துவம் 

சொத்து அறிக்கைகளை சரியான நேரத்தில் சமர்ப்பிப்பது என்பது சட்டப்பூர்வ கடமை மட்டுமல்ல. சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் வெளிப்படுத்தல் என்பது ஒரு முக்கிய ஊழல் எதிர்ப்பு கருவியாகும், இது பொது அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பொறுப்புகள் மற்றும் அவர்களின் நியாயமான வருமானத்தின் முரண்பாடுகள் மற்றும் விவரிக்கப்படாத சொத்துக்களை அடையாளம் காண உதவுகிறது.  ஆளுகை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணுவதற்கும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கும் இத்தகைய நடவடிக்கைகள் முக்கியமானவை.  

சொத்து அறிவிப்புகள் மற்றும் தொடர்புடைய அபராதங்கள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு, ஊழல் தடுப்புச் சட்டத்தின் 79-92 பிரிவுகளைப் பார்க்கவும்.  

 CIABOC இல் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட சொத்து அறிவிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்யவும். 

2024-09-17
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்