The Ministry of Finance Annual Report, released on 31st May 2024, shows that in 2023, the Government of Sri Lanka exceeded its total expenditure by LKR 104 billion. The total expenditure budgeted based on the government’s revised estimate in 2023 was LKR 5,253 Bn. However, the government spent LKR 5,357 Bn in 2023, which is 2% above the budgeted figure.
2023 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தின் மொத்த செலவீனமானது ரூபா 104 பில்லியனால் அதிகரித்துள்ளதாக, 2024 மே 31ஆம் திகதி வெளியிடப்பட்ட நிதி அமைச்சின் ஆண்டறிக்கை காட்டுகிறது. 2023 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் திருத்தப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் வரவு செலவுத் திட்ட மொத்தச் செலவினம் ரூபா 5,253 பில்லியன் ஆகும். எவ்வாறாயினும், 2023 இல் அரசாங்கம் ரூபா 5,357 பில்லியனை செலவிட்டுள்ளதோடு, இது பாதீட்டுப் பெறுமதியை விட 2% அதிகமாகும்.
இவ்வதிகரித்த செலவினம், 2023 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட 12% அதிகமாக இருப்பதோடு, இது ரூபா 263 பில்லியன் வட்டிக் கொடுப்பனவுகளுக்கான செலவினங்கள் அதிகரித்ததன் மூலம் முதன்மையாக உந்தப்பட்டுள்ளது. அரச முதலீடுகள் ரூபா 106 பில்லியனால் அதிகரித்துள்ளதோடு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான செலவினம் ரூபா 52 பில்லியனால் உயர்ந்துள்ளது. மாறாக, மானியங்கள் மற்றும் மாற்றல்கள் ரூபா 39 பில்லியனால் குறைந்துள்ளதோடு, சம்பளம் மற்றும் வேதனங்கள் ரூபா 47 பில்லியனால் குறைந்துள்ளன.
அட்டவணை 1: 2023 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் உண்மையான செலவினங்களின் ஒப்பீடு
செலவினம்
|
2023 திருத்தப்பட்ட மதிப்பீடுகள் |
2023 உண்மையான செலவினம் |
விலகல் (ரூபா பில்லியன்) |
விலகல் (%) |
மீண்டெழும் செலவினம் |
4,471 |
4,700 |
229 |
5% |
சம்பளங்களும் வேதனங்களும் |
986 |
940 |
(47) |
-5% |
பொருட்கள் மற்றும் சேவைகள் |
248 |
300 |
52 |
21% |
வட்டிக் கொடுப்பனவுகள் |
2,193 |
2,456 |
263 |
12% |
மானியங்கள் மற்றும் மாற்றல்கள் |
1,044 |
1,005 |
(39) |
-4% |
மூலதன செலவினம் மற்றும் நிகர கடன் வழங்கல் |
782 |
657 |
(125) |
-16% |
அரச முதலீடுகள் |
827 |
933 |
106 |
13% |
ஏனையவை |
(45) |
(276) |
(231) |
513% |
மொத்த செலவினம் |
5,253 |
5,357 |
104 |
2% |
குறிப்பு: செல/ம் - அரச செலவினம். வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் செலவின வகைகள் நிதியமைச்சின் ஆண்டறிக்கையில் உள்ளவற்றிலிருந்து வேறுபடுகின்றன. எனவே, நிதியமைச்சின் ஆண்டறிக்கை 2023 இன் அட்டவணை 5.6 இலிருந்து திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் அசல் அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளுக்குப் பதிலாக இந்தப் பகுப்பாய்விற்குப் பயன்படுத்தப்பட்டன. ஏனையவை "முக்கியமாக நிகர கடன் வழங்கலை" உள்ளடக்கியது.
மூலம்:
நிதி அமைச்சின் இறுதி வரவு செலவுத்திட்ட நிலைப்பாட்டு அறிக்கை (ஆண்டறிக்கை) 2023 https://www.treasury.gov.lk/api/file/ad12f7fa-d2db-43d4-9daa-9270ee7b7cac [இல் [இறுதி அணுகல் 8 ஆகஸ்ட் 2024]