ஜெனரல்
-
data-chart
2023 அரச செலவினங்களின் அதிகரிப்பு, வட்டி கொடுப்பனவுகளின் அதிகரிப்புடன் பொருந்துகிறது

2023ல் அரசாங்க செலவினம் 20% ஆல் அதிகரித்து, 2022ல் ரூபா 4,473 பில்லியனில் இருந்து ரூபா 5,357 பில்லியனை எட்டியது. இந்த ரூபா 884 பில்லியன் அதிகரிப்பு முதன்மையாக ரூபா 890 பில்லியன் வட்டி செலுத்துதலின் காரணமாக ஏற்பட்டது. மாற்றமாக, ஏனைய அனைத்து வகைகளுக்குமான செலவினம் 6 பில்லியன் ரூபாவால் குறைந்துள்ளது. குறிப்பாக, மூலதன மாற்றல்கள் ரூபா 198 பில்லியனால் அதிகரித்தன, மாற்றல் கொடுப்பனவுகள் ரூபா 190 பில்லியன் உயர்ந்தன, மற்றும் ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளின் கொள்வனவு ரூபா 117 பில்லியன் அதிகரித்தது. இருப்பினும், சம்பளம் மற்றும் படிகள் ரூபா 17 பில்லியனால் குறைந்துள்ளதோடு தேறிய கடன் வழங்கல் ரூபா 494 பில்லியன் குறைந்துள்ளது. 

 

இலங்கை மத்திய வங்கி. ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு 2023 https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-economic-review/annual-economic-review-2023  இல். [இறுதி  அணுகல் 27 மே 2024].  

 

 

2024-06-26
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்