ஜெனரல்
-
data-chart
பிணைமுறி மோசடி நடந்து 9 ஆண்டுகள்!

2015 ஆம் ஆண்டின் பிணைமுறி மோசடி இடம்பெற்று பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதியுடன் ஒன்பது வருடங்கள் நிறைவடைகின்றன. இது இலங்கையின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதியமான ஊழியர் சேமலாப நிதியத்தின் முறையற்ற பரிவர்த்தனைகள் குறித்து 2019 இல் தடயவியல் கணக்காய்வுக்கு வழிவகுத்தது.

தடயவியல் கணக்காய்வு அறிக்கைகள் குறிப்பிடத்தக்க இழப்புக்களை வெளிப்படுத்தியுள்ளதுடன், 2002 முதல் 2015 வரையான காலப்பகுதியில் பிணைமுறிச் சந்தை பரிவர்த்தனைகளில் கிட்டத்தட்ட ரூ.10 பில்லியன் (ரூ.9,826 மில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. 1998 முதல் 2017 வரை பட்டியலிடப்பட்ட பங்குகளில் ரூ.9,470 மில்லியன் மற்றும் பட்டியலிடப்படாத பங்குகளில் ரூ.389 மில்லியன் மொத்த இழப்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டதாகவும் அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது. பிணைமுறிச் சந்தை மற்றும் பங்குச் சந்தை ஆகிய இரண்டிலும் ஏற்பட்ட இந்த இழப்புகள், கிட்டத்தட்ட ரூ. 20 பில்லியன் ஆகும்! 

2024-02-27
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்