ஒக்டோபர் 2021ல் பேரண்டப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை உறுதிசெய்வதற்காக மத்திய வங்கி ஆளுனர் ஆறு மாத கால வழிகாட்டுதலை அறிவித்தார்.
உறுதியளிக்கப்பட்ட இலக்குகள் எட்டப்பட்டதா என்பதைக் கண்டறிய சரிபார்க்கக்கூடிய அளவிடக்கூடிய 14 இலக்குகள் கண்காணிக்கப்பட்டன.
ஆய்வின் முடிவுகள் பின்வருமாறு.
ஒவ்வொரு இலக்கினதும் விபரங்களும் 2022 பெப்ரவரியில் அவற்றின் நிலை என்ன என்பதையும் கீழுள்ள அட்டவணை 1 பட்டியலிடுகிறது.
# |
நடவடிக்கை |
2022 மார்ச் இறுதிக்குள் இலக்கு |
திட்டத்தில் குறிப்பிடப்பட்டது |
பெப்ரவரி இறுதியில் எட்டப்பட்டது |
1 |
ஏற்றுமதிகளை அதிகரித்தல் |
மாதாந்தம் ஏற்றுமதிகளை ஐ.அ.டொ 1 பில்லியனை விட அதிகரித்தல் (சராசரியாக 2021ன் எஞ்சியுள்ள மாதங்களுக்கு) |
ஜனாதிபதி பணிக்குழு மூலமாக வெளிநாட்டுச் செலாவணிப் பாய்ச்சல்களை (ஏற்றுமதிகள் மற்றும் முதலீடுகள்) கண்காணித்தல் (இலக்கானது ஏற்றுமதியை 2021ன் எஞ்சியிருக்கும் காலத்தில் மாதமொன்றிற்கு சராசரியாக ஐ.அ.டொ 1.0 பில்லியனுக்கு மேலாக அதிகரித்தல்) |
சராசரி மாதாந்த ஏற்றுமதிகள் – ஐ.அ.டொ 1.2 பில்லியன் (ஒக்டோபர் – டிசம்பர் 2021) |
2 |
நாட்டிற்கான பன்னாட்டு முறிகளைப் படிப்படியாகக் குறைப்பதுடன் அந்த விகிதத்திலேயே பேணுதல் |
நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வெளிப்படுத்துகைளை 2021 இறுதியில் மொ.உ.உற்பத்தியில் 16 சதவீதமாகவும் 2024ல் 10 சதவீதமாகவும் பேணுதல் |
நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வெளிப்படுத்துகைகளைப் படிப்படியாகக் குறைத்து 2021 இறுதியில் மொ.உ.உற்பத்தியில் 16 சதவீதமாகவும் 2024ல் 10 சதவீதமாகவும் பேணுதல் |
2021 இறுதியில் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வெளிப்படுத்துகை மொ.உ.உற்பத்தியில் 15.9 சதவீதமாக இருந்தது. |
3 |
மொத்த அலுவல்சார் ஒதுக்குகளை அதிகரித்தல் |
4 மாத கால இறக்குமதிகள் |
குறைந்தது 4 மாத கால இறக்குமதிகளை ஈடுகட்ட மொத்த அலுவல்சார் ஒதுக்குகளை அதிகரித்தல் |
பயன்படுத்தக்கூடிய ஒதுக்குகள் 1.5 மாதத்திலிருந்து 0.4 மாத இறக்குமதிகளாகக் குறைந்துள்ளன |
4 |
நிலையான வட்டி வீதத்தை உறுதிசெய்தல் |
ஓராண்டு கால திறைசேரி உண்டியலுக்கு 7% (ஒக்டோபர் 1, 2021 நிலவரப்படி) |
நிலையான வட்டி வீதங்கள் மற்றும் செலாவணி வீதத்தை உறுதிப்படுத்துதல் |
ஓராண்டு முதன்மை சந்தை திறைசேரி உண்டியலின் விகிதம் 527 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரித்தது |
5 |
நிலையான செலாவணி வீதத்தை உறுதிசெய்தல் |
செலாவணி வீதத்தை ஐ.அ.டொலர் ஒன்றுக்கு ரூ. 200 – 203 இடையே பேணுதல் |
நிலையான வட்டி வீதங்கள் மற்றும் செலாவணி வீதத்தை உறுதிசெய்தல் |
பெப்ரவரி இறுதியில் செலாவணி வீதம் 48 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது. |
6 |
நாட்டிற்கான கொடுகடன் தரமிடல்களை மேம்படுத்த உதவுதல் |
ஃபிட்சின் கொடுகடன் தரமிடலை CCC தரத்திற்கு மேலே பேணுதல் |
நாட்டின் கொடுகடன் தரமிடல்களை மேம்படுத்த உதவுதல் |
2021 டிசம்பரில் ஃபிட்ச் இலங்கையின் தரமிடலை CC ஆகத் தரமிறக்கியது |
7 |
பணவீக்கத்தை நடு ஒற்றை இலக்கத்தில் பேணுவதை உறுதிசெய்தல் |
பணவீக்கத்தை 4% - 6% இடையே பேணுதல் |
பணவீக்கத்தை நடு ஒற்றை இலக்கத்தில் பேணுவதை உறுதிசெய்தல் - 4% முதல் 6% வரை |
மார்ச் மாத்திற்கான பணவீக்கம் 18.7 சதவீதமாக மோசமடைந்தது |
8 |
பன்னாட்டு இணைத்தரப்பினர்களுடன் குறுகிய கால பரஸ்பர நாணயப் பரிமாற்றங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துதல் |
ஐ.அ.டொ 1.5 பில்லியன் |
பன்னாட்டு இணைத்தரப்பினர்களுடன் குறுகிய கால பரஸ்பர நாணயப் பரிமாற்றங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துதல் (இலக்கு: ஐ.அ.டொ 1.5 பில்லியன்) |
பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களுக்கு அமைய, இந்தியாவிடமிருந்து மட்டும் ஐ.அ.டொ 400 மில்லியனை இலங்கையால் பெற முடிந்தது. CNY 10 பில்லியன் பரஸ்பர நாணயப் பரிமாற்றத்திற்கான (ஐ.அ.டொ 1.5 பில்லியன்) பேச்சுவார்த்தை மார்ச் 2021ல் நடத்தப்பட்டு இணக்கம் எட்டப்பட்டது. டிசம்பர் 2021ல் நிதி பெற்றுக் கொள்ளப்பட்டாலும் இதைப் புதிய பரஸ்பர நாணயப் பரிமாற்றமாகக் கருத முடியாது. |
9 |
மேம்படுத்தப்பட்ட தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்/ தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள் விகிதம் மூலம் மத்திய வங்கியின் ஐந்தொகையை வலுவூட்டல் |
மொத்த வெளிநாட்டுச் சொத்துக்கள்/ மொத்த உள்நாட்டுச் சொத்துக்கள் விகிதத்தை -7.3 சதவீதத்திற்கும் அதிகமாகப் பேணுதல் |
மேம்படுத்தப்பட்ட மொத்த வெளிநாட்டுச் சொத்துக்கள்/ மொத்த உள்நாட்டுச் சொத்துக்கள் விகிதம் மூலம் மத்திய வங்கியின் ஐந்தொகையை வலுவூட்டல் |
ஒக்டோபர் 2021ல் -7.3 சதவீதமாகக் காணப்பட்ட இந்த விகிதம் டிசம்பர் 2021ல் -8.4 சதவீதமாக மோசமடைந்தது. |
10 |
நிதிச் சட்டத்தின் மூலம் வரி மன்னிப்பை நடைமுறைப்படுத்தி உட்பாய்ச்சல்களை எளிதாக்குதல் |
ஐ.அ.டொ 100 மில்லியன் |
நிதிச் சட்டத்தின் மூலம் வரி மன்னிப்பை நடைமுறைப்படுத்தி உட்பாய்ச்சல்களை எளிதாக்குதல் (இலக்கு: ஐ.அ.டொ 100 மில்லியன்) |
வரி மன்னிப்பு மூலம் கிடைக்கபெற்ற உட்பாய்ச்சல்கள் தொடர்பில் பொது வெளியில் எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை |
11 |
தெரிவுசெய்யப்பட்ட மூலோபாயமற்ற/ குறைந்தளவு பயன்படுத்தப்பட்ட சொத்துக்களைப் பணமாக்குதல் |
ஐ.அ.டொ 1.0 பில்லியன் |
தெரிவுசெய்யப்பட்ட மூலோபாயமற்ற/ குறைந்தளவு பயன்படுத்தப்பட்ட சொத்துக்களைப் பணமாக்குதல் (இலக்கு: ஐ.அ.டொ 1.0 பில்லியன்) |
இதன் மூலம் கிடைத்த வருமானம் தொடர்பில் எந்தவிதத் தகவல்களும் பொது வெளியில் கிடைக்கவில்லை. |
12 |
வாராந்த திறைசேரி உண்டியல் ஏலம் |
ரூ.50 பில்லியன் பெறுமதிக்குக் கீழ் |
ரூ.50 பில்லியன் பெறுமதிக்குக் கீழ் வாராந்த திறைசேரி உண்டியல் ஏலம் |
ஒக்டோபர் 2021 – மார்ச் 2022 காலப்பகுதியில் வாராந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட திறைசேரி உண்டியல் ஏலங்கள் சராசரியாக ரூ. 62 பில்லியன் |
13 |
ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட அரசப் பிணையங்களில் வெளிநாட்டு உடமைகளை வைத்திருத்தல் |
ஐ.அ.டொ 1 பில்லியன் |
அரசப் பிணையங்களில் 2.5% வெளிநாட்டு உடமைகள் (ஐ.அ.டொ 1 பில்லியன்) |
திறைசேரி உண்டியல் மற்றும் முறிகளில் வெளிநாட்டு முதலீடு ரூ.789 மில்லியனால் அதிகரிக்கப்பட்டது (ஐ.அ.டொ 3.94 மில்லியன்) |
14 |
இலங்கை அபிவிருத்தி முறிகளின் முதலீட்டாளர்களை பன்முகப்படுத்தல் மற்றும் அவற்றுக்கான வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்தல் |
அடுத்த ஆறு மாதங்களில் இலங்கை அபிவிருத்தி முறிகளின் பூரணமான திரட்டலுக்கான ஒழுங்குகளை மேற்கொள்ளல் |
இலங்கை அபிவிருத்தி முறிகளின் முதலீட்டாளர்களை பன்முகப்படுத்தல் மற்றும் அவற்றுக்கான வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்தல் – அடுத்த ஆறு மாதங்களில் இலங்கை அபிவிருத்தி முறிகளின் பூரணமான திரட்டலுக்கான ஒழுங்குகளை மேற்கொள்ளல் |
இலங்கை அபிவிருத்தி முறிகளின் பெறுமதி ஐ.அ.டொ 2,305 மில்லியனில் இருந்து ஐ.அ.டொ 1,835 மில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒக்டோபர் 21 – மார்ச் 22 காலப்பகுதியில் 55% மட்டுமே திரட்டப்பட்டுள்ளன. |