-
மதிப்பிடப்பட்ட பெறுமதியிலிருந்து அரசாங்கத்தின் வருமானத்தில் ஏற்படும் விலகல் கடந்த காலங்களில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அரசாங்கம் அதன் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்ட செலவினங்களுக்குச் செலவிடுவதில் குறைவு காணப்படுவதுடன் வரவு செலவுத் திட்ட நிலுவையும் மோசமடைகிறது. மதிப்பிடப்பட்ட பெறுமதியிலிருந்து வரவு செலவுத்திட்ட நிலுவையின் விலகல் 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டில் 3.5 மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த வரவு செலவுத்திட்டத்திலிருந்து விலகல்களின் சுருக்க விபரம் இங்கே தரப்பட்டுள்ளது.