ஜெனரல்
-
data-chart
2023 இல் அரசாங்கம் தனது செலவினங்களுக்கு எவ்வாறு நிதியளித்தது?

இலங்கை மத்திய வங்கியின் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வின் ஊடாக அண்மையில் வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான நிதி இலக்கங்கள், 2023 ஆம் ஆண்டிற்கான இலங்கை அரசாங்கத்தின் மொத்த செலவினம் ரூபா 5,357 பில்லியன் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த செலவினத்தின் குறிப்பிடத்தக்க பகுதியான ரூபா 2,456 பில்லியன் (43%) எனும் தொகை, ஏற்கனவே உள்ள அரசாங்க கடனின் வட்டிக் கொடுப்பனவுகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாற்றல் கொடுப்பனவுகளுக்காக ரூபா 1,005 பில்லியனும் சம்பளம் மற்றும் படிகளுக்காக  ரூபா 939 பில்லியனும் செலுத்தப்பட்டுள்ளன. 

அரசாங்கம் அதன் செலவினங்களில் 57% ஐ  தனது வருமான மூலங்கள் மூலம் நிதியளித்துள்ளது. இதனுள் முதன்மை வருமான மூலமான வரிகள், ரூபா 3,017 பில்லியன் ஆகும். இதில் ரூபா 1,399 பில்லியன் மொத்தப் பெறுமதிகொண்ட உள்நாட்டு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகள் (முக்கியமாக பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் கலால் வரிகள்), மற்றும் ரூபா 911 பில்லியன் மொத்தப் பெறுமதி கொண்ட வருமானம் மற்றும் இலாபத்தின் மீதான வரிகள் (முக்கியமாக நிறுவனங்கள் மற்றும் தனிநபர் வருமான வரிகள்)  என்பவை முக்கிய வருமானப் பங்களிப்பை வழங்குகின்றன. 

எஞ்சிய 43% அரசாங்க செலவீனமானது, ரூபா 2,282 பில்லியன் கடன் பெறுவதன் மூலம் நிதியளிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், ஆண்டிற்கான அதன் வட்டிக் கொடுப்பனவுகளை ஈடுசெய்வதற்காக அரசாங்கம் மொத்தமாக ரூபா 2,456 பில்லியன் கடன் வாங்க வேண்டியிருந்தது. வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்தக் கூடுதல் கடன் பெறுதலானது அரசாங்கக் கடனின் மொத்தத் தொகையை அதிகரித்து, இறுதியில் வட்டிபட்டியலை மேலும் உயர்த்துகிறது.

மூலம்: இலங்கை மத்திய வங்கி. ஆண்டிற்குரிய பொருளாதார மீளாய்வு 2023 (2023),   https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-economic-review/annual-economic-review-2023 [இறுதி அணுகல் 27, மே  2024] இல். 

2024-05-27
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்