2022 உடன் ஒப்பிடுகையில் அரச வருமானம் 53% ஆல் (ரூபா 1,062 பில்லியன்) கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் 2023 ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு குறிப்பிடுகிறது. இந்த அதிகரிப்பானது, VAT இன் ரூபா 231 பில்லியன் மிக அதிகமான பங்களிப்புடனும், அதைத் தொடர்ந்து கம்பனிஅல்லாத வருமான வரி (முக்கியமாக தனிநபர் வருமான வரிகள்) ரூபா 144 பில்லியன், வட்டி மீதான வரிகள் ரூபா 138 பில்லியன், கலால் வரி ரூபா 127 பில்லியன், மற்றும் ஏனைய வருமானங்கள் மொத்தமாக ரூபா 421 பில்லியன் என பரந்த அளவிலான வரிகளால் உந்தப்பட்டது. ஏனைய வரி வருமானத்தில் "உரிமம் வரிகள், SSCL மற்றும் ஏனையவை"(இவை ரூபா 183 பில்லியனால் உயர்ந்துள்ள) மற்றும் "முத்திரை வரி/செஸ் வரி/SRL/NBT/NSL/TL" மற்றும் மானியங்கள் அடங்கும். வருமான சேகரிப்பில் ஏற்பட்ட இந்த அதிகரிப்புக்கு, 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மற்றும் 2023 ஆம் ஆண்டு முழுவதும் செயல்படுத்தப்பட்ட பல்வேறு வரிச் சீர்திருத்தங்கள் காரணமாகின.
மூலம்: இலங்கை மத்திய வங்கி, ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு (2023) https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-economic-review/annual-economic-review-202 எனும் இணையதளத்தில். [இறுதி அணுகல் 27 May 2024].