2021 ல் இலங்கை விளையாட்டுத் துறைக்கு ரூபா 12.6 பில்லியன் ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளது, இது தேசிய வரவு செலவுத் திட்டத்தில் 0.26% ஆகும். முன்மொழியப்பட்ட இச் செலவினமானது மூன்று முக்கிய அரச நிறுவனங்களான, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களம் மற்றும் கிராமப்புற மற்றும் பாடசாலை விளையாட்டு மேம்பாட்டு மாநில அமைச்சு என்பவற்றினுடாக இடம்பெறும்.
விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கான செலவினம் 82% மற்றும் செயல்பாட்டுச் செலவினம் 18% ஆகும். இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை மேம்பாட்டு அமைச்சர் மொத்த ஒதுக்கீட்டில் 62% இனைப் பெற்றுள்ளார். ஒவ்வொரு அமைச்சினதும் செலவினங்களின் பாகுபாடு கீழே உள்ள விளக்கப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட முக்கிய செயற்திட்டங்களில் பெரும்பாலானவை இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரின் கீழ் செயற்படுத்தப்பட உள்ளன. ரூபா 1,329 மில்லியன் செலவில் சுகததாச தேசிய விளையாட்டு வளாகத்தை பராமரித்து மேம்படுத்துவதே அதிக திரள்வு கொண்ட திட்டமாகும்.