ஜெனரல்
-
data-chart
வருமான வரி வரம்பு மாற்றங்கள்

உத்தியோகம் மூலமான வருமானம், வர்த்தகம் மூலமான வருமானம், முதலீட்டு வருமானம் மற்றும் பிற வருமானங்கள் ஆகியவற்றை வரி செலுத்த வேண்டிய வருமானமாக இலங்கையின் தனிநபர் வருமான வரி கருதுகிறது.

ஜனவரி 2020ல் தனிநபர் வருமான வரியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. வருமான வரம்பில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்களைப் பின்வரும் விளக்கப்படம் சுட்டிக்காட்டுகிறது.

2020ல் செய்யப்பட்ட மாற்றங்களில் தனிநபர் உத்தியோகம் மூலமான வருமானத்தில் இருந்து பெறப்பட்ட ‘உழைக்கும் போது செலுத்தும் வரி’ (PAYE) நீக்கப்பட்டது. PAYE வரியின் கீழ் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பொருத்தமான வரியைக் கழித்து அதை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செலுத்த வேண்டிய தேவை தொழில் வழங்குநர்களுக்கு இருந்தது.

PAYE வரியானது தனியாள் முற்பை வருமான வரியாக (APIT - Advanced Personal Income tax) மாற்றப்பட்டது. PAYE வரியில் காணப்பட்ட வரி விலக்கு வரம்பை விட இந்த வரியில் வரி செலுத்தத் தேவையற்ற வரம்பு 2.5 மடங்கு அதிகமாகும். PAYE கட்டாயமான ஒன்றாக இருந்தபோதும், இந்த வரி ஊழியர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தன்னார்வமாகச் செலுத்தப்படும் வரியாக உள்ளது.

2021-11-08
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்