ஜெனரல்
-
data-chart
NPPயின் சுகாதாரம் தொடர்பான தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள்

நிதி நெருக்கடி இல்லாமல் அனைத்து பிரஜைகளாலும் அணுகக்கூடிய, உயர் தரம் வாய்ந்த சுகாதார சேவைகளின் அவசியத்தை இந்தத் தேர்தல் அறிக்கை வலியுறுத்துகிறது. உலகளாவிய தரங்களை பூர்த்தி செய்வதற்கும் இலங்கையின் சுகாதார அமைப்பை மேம்படுத்துவதற்கும், நிதி, மனித வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

திறமையான மற்றும் நோயாளிகளை மையமாகக் கொண்ட சுகாதாரப் பராமரிப்பு சேவை அனைவருக்கும் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் இவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்கு தேசிய வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிதி அவசியமாகிறது.

  1. குறுகிய காலத்திற்குள் அரச சுகாதார செலவினத்தை படிப்படியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 3% ஆக அதிகரித்தல்.
  2. பணியின் போது விபத்துக்குள்ளாகும் ஊழியர்களுக்கு, அவர்கள் மீண்டும் தங்கள் பணிகளுக்குத் திரும்பும் வரை மருத்துவச் செலவுகளுக்கான காப்பீடு மற்றும் பொருத்தமான கொடுப்பனவை வழங்குதல்.
  3. ஒவ்வொரு மாவட்டம்/மாகாணத்திலும் வசதிகளுடன் கூடிய நீடிக்கப்பட்ட இருதயவியல் பிரிவு, புற்றுநோயியல் பிரிவு, கண் மருத்துவப் பிரிவு மற்றும் சிறுநீரகவியல் பிரிவுகளை அமைத்தல்.
  4. நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களிடமிருந்து வரும் புகார்களை சுயாதீனமாக விசாரிப்பதற்கு ஒரு சேவைப் பின்னூட்டல் பிரிவை நிறுவுதல்.
  5. மருந்துப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒரு திறமையான மருந்தக பரிசோதனை ஆய்வகத்தை நிறுவுதல்.
  6. ஒவ்வொரு நகரத்திலும் அரசுக்குச் சொந்தமான மருந்தகங்களை நிறுவுதல்.
  7. ஒவ்வொரு சுகாதார மருத்துவ அதிகாரிக்கான (MOH) பகுதியிலும் ஆரம்ப மனநலப் பராமரிப்பு மையங்களை அமைத்தல்.
  8. ஒவ்வொரு மாவட்டத்திலும் மறுவாழ்வு மையங்களை நிறுவுதல்.
  9. ஒவ்வொரு மருத்துவமனையிலும் தினசரி சிகிச்சை மையங்களை நிறுவுதல்.

மூலம்

NPPயின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை 2024 https://www.akd.lk/policy/இல் [இறுதியாக அணுகப்பட்டது: 11 பெப்ரவரி 2025]

 

2025-02-13
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்