ஜூலை மாதத்திற்கான மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தைத் தொடர்ந்து, எரிபொருள் விலை கண்காணிப்பானில் காட்டப்பட்டுள்ளபடி, 92-ஒக்டேன் பெற்றோலின் சந்தை விலை எரிபொருள் விலை சூத்திரத்துக்கு மேலாக ரூபா 16.67 ஆகவும், ஒட்டோ டீசலின் சந்தை விலை எரிபொருள் விலை சூத்திரத்துக்கு மேலாக ரூபா 21.68 ஆகவும் உள்ளது.
ஒட்டோ டீசலைப் பொறுத்தவரை, உலகச் சந்தை விலை மாற்றங்களுக்கு ஏற்ப மாறும் சூத்திர விலை, ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூலையில் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது, அதே நேரம் உள்நாட்டு சந்தை விலை மாற்றமடையாமல் லீட்டருக்கு ரூபா 317 ஆகவே இருந்தது.
ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் 92-ஒக்டேன் பெற்றோலுக்கான சூத்திர விலை 3 ரூபாவால் குறைந்துள்ள அதே காலகட்டத்தில் சந்தை விலை 11 ரூபாவினால் குறைந்து லீட்டர் ரூபா 344 ஆக உள்ளது.
மேலும், அரசாங்கம் 92-ஒக்டேன் பெற்றோலுக்கு ரூபா 134 ஐயும் டீசல் மீது ரூபா 99 ஐயும் வரியாக விதிக்கிறது. இந்த வரிகளைத் தவிர்த்து, ஒரு லீட்டர் 92-ஒக்டேன் பெற்றோலை விற்பனை செய்வதற்கான விலை ரூபா 194 மற்றும் ஒட்டோ டீசலுக்கு ரூபா 196 ஆகும்.