வருமான வரி (PAYE உள்ளடங்கலாக) மூலம் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் மொத்த வருமானமானது வருமான வரிக்காகப் பதிவுசெய்துள்ள மொத்த வரி செலுத்துனர்களால் (இதில் தனிநபர் வரி செலுத்துனர்கள் மற்றும் PAYE / APIT கீழ் வருமான வரி செலுத்தும் தொழிலாளர்கள் அடங்குகின்றனர்) வகுக்கப்பட்டு நபர் ஒருவருக்கான வருமான வரி கணக்கிடப்படுகிறது. நபர் ஒருவருக்கான வரி 2019ம் ஆண்டில் ரூ.192,365 இலிருந்து 2020ம் ஆண்டில் ரூ.231,624 ஆக அதிகரித்துள்ளது. வரிக் கொள்கைகளில் PAYEக்குப் பதிலாக APIT, வருமான வரிக்கான வரம்பு உயர்த்தப்பட்டமை போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டபோதும் இந்த அதிகரிப்பு காணப்படுகிறது. சேகரிக்கப்பட்ட மொத்த வருமான வரியில் ஏற்பட்ட வீழ்ச்சியைக் காட்டிலும் பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துனர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவே இந்த அதிகரிப்புக்கான முக்கிய காரணம் ஆகும். ஏற்கனவேயுள்ள குறைந்தளவான வரி செலுத்துனர்கள் இன்னும் அதிக வரியைச் செலுத்த வேண்டியேற்படுகிறது என்பதே இதன் அர்த்தமாகும்.
வரி செலுத்துவதற்கான அடிப்படைக் குறைவடைதல் பற்றி மேலும் அறிய