இலங்கை புகையிரதத் திணைக்களம் கடந்த பல வருடாங்களாக நட்டத்தில் இயங்கிவருகிறது. கடந்த 10 வருடங்களில் அதாவது 2010 – 2020 ஆம் ஆண்டு வரை இலங்கை புகையிரத திணைக்களத்தின் மொத்த நட்டம் ரூ. 331 பில்லியன். இது எந்தவொரு அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தையும் விட அதிகமாகும்.
வேறு விதமாகக் கூறுவதானால் பயணிகள் மூலமான வருமானம் (சாதாரண டிக்கெட் பயணிகள், சீசன் டிக்கெட் பயணிகள்), பொருட்களை கொண்டு செல்வது மூலமான வருமானம் மற்றும் பிற வருமானங்கள் மூலம் ரயில்வே திணைக்களத்தின் ஊழியர்களுக்கான ஊதியச் செலவினத்தைச் செலுத்துவதற்குப் போதாமல் உள்ளது. இந்த ஊதியங்களில் புகையிரத திணைக்கள ஊழியர்களின் சம்பளம், வேதனங்கள், கூடுதல் நேரம் மற்றும் விடுமுறைக் கொடுப்பனவுகள், பிற கொடுப்பனவுகள் அடங்கும். இது கடந்த 8 ஆண்டுகளில் (2103 – 2020) இலங்கை புகையிரத திணைக்களத்தின் ஆண்டுச் செலவினத்தில் சராசரியாக வெறும் 24% ஆகும்.
2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ரூ.45 பில்லியன் நட்டம் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. எனினும் கடந்த ஆண்டில் கோவிட் – 19 காரணமான ஊரடங்கு மற்றும் பயணக் கட்டுப்பாடுகளால் பயணிகள் போக்குவரத்து மூலமான வருமானம் குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.