ஜெனரல்
-
data-chart
2019 உடன் ஒப்பிடும் போது 2021ல் இலங்கையின் இறக்குமதி 4% அதிகமாக இருந்தது.

இலங்கையின் இறக்குமதிகள் 2019 முதல் 2021 வரை 4 சதவீதத்தால் (ஐ.அ.டொ 700 மில்லியன்) அதிகரித்துள்ளன. இந்த அதிகரிப்பிற்கு முக்கிய பங்களித்தது மருந்து மற்றும் மருந்தாக்கல் பொருட்களின் இறக்குமதி ஆகும். இது 60 சதவீதத்தால் அதிகரித்து ஐ.அ.டொ 330 மில்லியனாகக் காணப்பட்டது. இருப்பினும், இந்தக் காலகட்டத்தில் தனியாள் ஊர்திகளின் இறக்குமதி 98 சதவீதத்தால் (ஐ.அ.டொ 803 மில்லியன்) குறைந்துள்ளது.

மேலே குறிப்பிட்ட அதிகரிப்பானது இறக்குமதியின் மதிப்பில் ஏற்படும் மாற்றத்தைக் கவனத்தில் கொள்கிறது. இது  இறக்குமதி செய்யப்பட்ட ஒரு அலகின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பாலோ இறக்குமதி செய்யப்பட்ட தொகையின் அதிகரிப்பாலோ ஏற்பட்டிருக்கலாம். எனவே, 2021 மற்றும் 2019ம் ஆண்டுகளுக்கான வர்த்தக அளவுச் சுட்டெண்ணின் நகர்வைக் கவனிப்பதன் மூலம், 2021ம் ஆண்டை விட (159) 2019ல் (164) சராசரி மாதாந்த இறக்குமதியின் அளவு அதிகமாக இருப்பதைக் காணலாம். 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021ம் ஆண்டில் இலங்கையின் இறக்குமதி குறைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. மேலும் இறக்குமதியில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு விலைகள் அதிகரித்ததே பிரதான காரணமாகும். மாதாந்த அலகு மதிப்புகளின் சராசரிப் பெறுமதி 2019ம் ஆண்டில் 91ல் இருந்து 2021ம் ஆண்டில் 95 ஆக உயர்ந்தது மூலம் இது தெளிவாகிறது.

2022-03-03
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்