ஜெனரல்
-
data-chart
2023 வரவுசெலவுத் திட்டத்தின் வருமான இலக்கு, ரூபா 382 பில்லியனால் தவறிவிட்டது

31 மே 2024 அன்று வெளியிடப்பட்ட நிதி அமைச்சின் ஆண்டறிக்கையானது 2023 ஆம் ஆண்டில், மானியங்கள் உட்பட மொத்த வருமானம், வரவுசெலவுத் திட்ட இலக்கை விட ரூபா 382 பில்லியனால் அதாவது 11% ஆல் குறைந்துள்ளது என்பதைக் எடுத்துக் காட்டுகிறது. 2023இல், உண்மையான மொத்த வருமானம் மற்றும் மானியங்கள் ரூபா 3,074 பில்லியனாக இருந்த அதே நேரம் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 2023 ஆண்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடுகள் ரூபா 3,456 பில்லியன் ஆகும். வருமானக் கூறுகளில், பாதியளவுக்கும் அதிகமான பெரும்பான்மையான பற்றாக்குறையை ஏற்படுத்துவதற்கு VAT பங்களித்துள்ளதோடு, அதன் மதிப்பிடப்பட்ட பெறுமதியை ரூபா 214 பில்லியனால் அல்லது 24% ஆல் தவறவிட்டுள்ளது. கலால் வரியும் கணிசமாக அளவில் குறைவாகவே ஈட்டப்பட்டு, ரூபா 88 பில்லியனால் குறைவடைந்துள்ளது. 

மாறாக, சில வருமானக் கூறுகள் அவற்றின் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடுகளை விட மிகையாக அதிகரித்துள்ளன. நிறுத்தி வைத்தல் வரிகள் மற்றும் உழைக்கும் போது செலுத்தும் (PAYE) வரிகளின் வருமானங்கள் முறையே ரூபா 68 பில்லியன் மற்றும் ரூபா 45 பில்லியன்களை அதாவது இலக்கை விட 76% மற்றும் 45% அதிகமாக உள்ளன. இந்த அதிகரிப்புக்கு, 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறுத்தி வைத்தல் வரிகள் மற்றும் உழைக்கும் போது செலுத்தும் (PAYE) வரிகள் ஆகியவற்றை மீண்டும் அறிமுகப்படுத்தியமை காரணமாக இருக்கலாம். 

காட்சி 1: 2023ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது அரசின் உண்மை வருமானம் 

வருமானம் 

2023 திருத்தப்பட்ட மதிப்பீடு 

2023 உண்மையான  

வருமானம் 

விலகல் (ரூபா பில்லியன்) 

விலகல் 

மொத்த வருமானம் மற்றும் மானியங்கள் 

3,456 

3,074 

(382) 

-11% 

VAT 

908 

694 

(214) 

-24% 

கலால் வரி 

557 

469 

(88) 

-16% 

சர்வதேச வர்த்தகத்தின் மீதான வரிகள் 

458 

392 

(65) 

-14% 

நிறுவன வருமான வரி 

597 

555 

(42) 

-7% 

நிறுத்தி வைத்தல் வரி 

90 

158 

68 

76% 

உழைக்கும் போது செலுத்தும் வரி 

100 

145 

45 

45% 

மூலம் 

நிதி அமைச்சின் FINAL BUDGET POSITION REPORT (ANNUAL REPORT) 2023' https://www.treasury.gov.lk/api/file/ad12f7fa-d2db-43d4-9daa-9270ee7b7cac இல் [இறுதி அணுகல் 7 ஆகஸ்ட் 2024]. 

நிதி அமைச்சின் Budget Estimates 2023' https://www.treasury.gov.lk/api/file/e286b9e4-59b1-406f-b324-12f2b46969f2 இல் [இறுதி அணுகல் 7 ஆகஸ்ட் 2024].

2024-08-09
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்