பொதுத் தேர்தல் நெருங்கி வருகின்றது. அரசாங்கம் இதற்காக ரூ.11 பில்லியனைச் செலவிட எதிர்பார்த்துள்ளது. ரூ.5 பில்லியன் 2024 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த நிதியில் இருந்தும், மீதமுள்ள ரூ.6 பில்லியன் அடுத்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் இருந்தும் வசூலிக்கப்படவுள்ளது. 2020 ஆம் ஆண்டு செலவிடப்பட்ட ரூ.5.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 93% அதிகரிப்பைக் காட்டுகின்றது. எனினும் ஒதுக்கப்பட்ட முழுமையான தொகையை அரசாங்கம் செலவிடுவதில்லை. 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.8 பில்லியனில் ரூ.5.7 பில்லியன் மாத்திரமே செலவிடப்பட்டிருந்தது.
2020 ஆம் ஆண்டு செலவினத்தில் பாதிக்கும் மேற்பட்டவை தேர்தல் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள், மேலதிக நேரக் கொடுப்பனவுகள் மற்றும் படிகளுக்கு என மொத்தமாக ரூ.3.2 பில்லியன் (மொத்தச் செலவில் 56%) செலவிடப்பட்டது. ஏனைய குறிப்பிடத்தக்க செலவுகளில் எரிபொருள் மற்றும் வாகன வாடகை ரூ.499 மில்லியனும், அச்சிடும் செலவுகள் ரூ.463 மில்லியனும் அடங்கும். முழுமையான செலவினங்கள் பற்றிய விபரங்களுக்கு அட்டவணை 1 ஐப் பார்வையிடவும்.
அட்டவணை 1: பொதுத் தேர்தலுக்கான செலவினங்கள்
வகை |
செலவு |
மொத்த செலவினத்தின் % ஆக |
உத்தியோகத்தர்களின் சம்பளம், மேலதிக நேரம் மற்றும் கொடுப்பனவுகள் |
3,205,284,448.52 |
56% |
எரிபொருள் மற்றும் வாகனங்களுக்கான செலவுகள் |
499,475,785.00 |
|
வாகனங்களுக்கான வாடகை |
263,464,532.40 |
9% |
எரிபொருள் |
236,011,252.60 |
|
அச்சிடும் செலவுகள் |
463,369,408.87 |
8% |
மின்சாரம், தொலைபேசி, நீர் மற்றும் ஏனைய சேவைகள் |
374,944,883.63 |
|
நீர் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட சேவைகள்; மற்றும் ஏனைய செலவுகள் |
186,956,579.56 |
7% |
மின்சாரம் |
187,988,304.07 |
|
நலன்புரிச் செலவுகள் |
302,869,916.80 |
5% |
எழுதுபொருள் / அலுவலக உபகரணங்கள் போன்ற செலவுகள் |
225,751,656.27 |
4% |
சுகாதார பாதுகாப்பு பொருட்கள் மற்றும் உபகரணங்கள் |
213,771,502.15 |
4% |
வாக்களிப்பு நிலைய வசதிகள் |
212,147,547.26 |
4% |
ஏனையவை |
229,967,810.69 |
|
விளம்பரம் (இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கான கொடுப்பனவுகள் உட்பட) |
52,974,076.00 |
4% |
தங்குமிடம், கட்டிடங்களுக்கு வாடகை |
14,755,284.90 |
|
முத்திரை மற்றும் தபால் கட்டணம் |
1,456,175.00 |
|
கட்டுமானங்கள் மற்றும் பழுதுபார்த்தல் |
104,814,810.47 |
|
சட்டவிரோத காட்சி பலகைகளை அகற்றுதல் |
55,967,464.32 |
|
மொத்தச் செலவு |
5,727,582,959 |
|
குறிப்பு
"ஏனையவை" என்பதில் விளம்பரம், தங்குமிடம் மற்றும் கட்டடங்களுக்கான வாடகைகள், முத்திரை மற்றும் தபால் கட்டணம், கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு மற்றும் சட்டவிரோத காட்சி பலகைகளை அகற்றுதல் ஆகியவை அடங்கும்.
மூலம்
தேர்தல் ஆணைக்குழு இலங்கை, பாராளுமன்ற தேர்தல் 2020 பற்றிய வெளியீடு, https://elections.gov.lk/web/wp-content/uploads/2018/09/Publication_Report_Par_Ele_2020_E.pdf என்னும் இணைப்பில் இருந்து பெறப்பட்டது [இறுதியாக அணுகியது: நவம்பர் 11, 2024]
இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம், "அமைச்சரவை முடிவுகள் 30 செப்டம்பர் 2024." https://www.dgi.gov.lk/news/cabinet-decisions/4704-cabinet-decisions-2024-09-30 என்னும் இணைப்பில் இருந்து பெறப்பட்டது [இறுதியாக அணுகியது: நவம்பர் 11, 2024]