ஜெனரல்
-
data-chart
ஒக்டோபர் மாதத்தில் பெற்றோல் மற்றும் டீசலின் சந்தை விலைகள் மற்றும் சூத்திர விலைகளுக்கு இடையிலான ஒப்பீடு

எரிபொருள் விலை கண்காணிப்பானின் பிரகாரம், ஒக்டோபர் மாதத்திற்கான மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து, 92-ஒக்டேன் பெற்றோலின் சந்தை விலையானது எரிபொருள் விலை சூத்திரத்தை விட ரூ.10 அதிகமாக உள்ளதுடன், ஒட்டோ டீசலின் சந்தை விலையானது எரிபொருள் விலை சூத்திரத்தை விட ரூ.22 அதிகமாக உள்ளது.   

92-ஒக்டேன் பெற்றோலின் உலக சந்தை விலை மாற்றங்களுக்கு ஏற்ப மாறுபடும் சூத்திர விலையானது, கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது ஒக்டோபரில் ரூ.15 ஆல் குறைக்கப்பட்டது. மேலும் உள்நாட்டு சந்தை விலை ரூ.21 ஆல் குறைந்து லீற்றருக்கு ரூ.311 ஆக உள்ளது.  

செப்டம்பருடன் ஒப்பிடும்போது ஒக்டோபரில் ஒட்டோ டீசலின் சூத்திர விலை ரூ.18 ஆல் குறைக்கப்பட்டதுடன், உள்நாட்டு சந்தை விலை ரூ.24 ஆல் குறைந்து லீற்றருக்கு ரூ.283 ஆக உள்ளது.  

அத்துடன், ஒக்டோபரில் 92-ஒக்டேன் பெற்றோலுக்கு 130 ரூபாவையும் டீசலுக்கு 94 ரூபாவையும் அரசாங்கம் வரியாக வசூலிக்கின்றது. இந்த வரிகள் நீங்கலாக, ஒரு லீற்றர் 92-ஒக்டேன் பெற்றோலின் விற்பனைச் செலவு ரூ.171 ஆகவும் ஒட்டோ டீசலுக்கு ரூ.167 ஆகவும் காணப்படுகின்றது. 

2024-10-02
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்