ஜெனரல்
-
data-chart
பாராளுமன்றத்தின் செலவினம் - அதில் என்ன அடங்கும்?

இலங்கை அதன் பாராளுமன்றத்தை நடத்துவதற்கு, விரிவான தரவுகளைக் கொண்ட மிகச் சமீபத்திய ஆண்டான 2022 ஆம் ஆண்டில் ரூ.3,248 மில்லியனைச் செலவிட்டுள்ளது - சராசரியாக ஒரு அமர்வுக்கான செலவினம் ரூ.32.2 மில்லியன் ஆகும். மூன்று முக்கிய பிரிவுகளுக்கிடையே செலவிடப்பட்டுள்ள இந்தச் செலவினமானது, நாளாந்தச் செயற்பாடுகள் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் அலுவலகத்திற்கான கொடுப்பனவுகள் வரை அனைத்தையும் உள்ளடக்கியது. அதன் விபரங்களை இங்கே காணலாம்: 

  1. ஸ்தாபனச் சேவைகள் – ரூ.1,759 மில்லியன் (54%)  

மொத்த வரவுசெலவுத் திட்டத்தில் பாதிக்கும் மேல் ஸ்தாபனச் சேவைகளுக்கே செலவிடப்பட்டுள்ளது. இதில் பாராளுமன்றத்தின் அத்தியாவசிய அன்றாட செயற்பாடுகள் அடங்கும். இந்த ரூ.1,759 மில்லியனில் உத்தியோகத்தர்களின் சம்பளம் (தனிப்பட்ட ஊதியங்கள்), உணவு, சீருடைகள், பராமரிப்பு மற்றும் ஸ்தாபனம் சீராக இயங்குவதற்கு அவசியமான செலவுகள்  அடங்கியுள்ளன. 

  1. பாராளுமன்ற உறுப்பினர்கள் - ரூ.1,288 மில்லியன் (40%)  

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நேரடி செலவுகள் மொத்த செலவினத்தில் 40% ஆகும். இதில் பாரிய தொகையான ரூ.333 மில்லியன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செலவுகளில் எரிபொருள் (ரூ.329 மில்லியன்), வாடகை மற்றும் உள்நாட்டு வரிகள் (ரூ. 276 மில்லியன்), சம்பளம் மற்றும் ஊதியங்கள் (ரூ.159 மில்லியன்), தபால் மற்றும் தகவல் தொடர்பாடல் செலவுகள் (ரூ.133 மில்லியன்) ஆகியவை அடங்குகின்றன. ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஒதுக்கப்படும் தனிப்பட்ட கொடுப்பனவுகள் பற்றிய விபரங்களுக்கு கீழே உள்ள அட்டவணை 1 ஐப் பார்வையிடவும். 

  1. சபாநாயகர் அலுவலகம் - ரூ.201 மில்லியன் (6%)  

பாராளுமன்றத்தின் மொத்த செயற்பாட்டுச் செலவில் 6% சபாநாயகர் அலுவலகத்திற்காகச் செலவிடப்படுகின்றது. இதில் ரூ.201 மில்லியன் சபாநாயகரின் பொறுப்புகள் மற்றும் நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகச் செலவிடப்படுகின்றது. 

அட்டவணை 1: பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் 

கொடுப்பனவுகள் 

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான தொகை 

அமர்வுக்கான கொடுப்பனவு     

ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்திலும் கலந்து கொள்வதற்கு ரூபா 2,500/= 

 

குழுக் கூட்டங்களுக்கான கொடுப்பனவு  

அமர்வு இல்லாத தினங்களில் நடைபெறும் ஒவ்வொரு குழுக் கூட்டத்திலும் சமூகமளிப்பதற்காக ரூபா 2,500/=. (அமர்வு தினங்களில் நடைபெறும் குழுக் கூட்டத்திற்கு சமூகமளிப்பதற்கு  எந்தக் கொடுப்பனவும் வழங்கப்படுவதில்லை). 

 

 

அலுவலகக் கொடுப்பனவு 

 

அலுவலகம் ஒன்றைப் பராமரிப்பதற்கு மாதம் ரூபா 100,000/= வழங்கப்படுகின்றது 

உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு (சம்பளம்) 

 

ரூபா 54,285.00 

கேளிக்கைக் கொடுப்பனவு 

 

ரூபா 1,000/= 

ஓட்டுநர்களின் கொடுப்பனவு 

ரூபா 3,500/= 

(மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினருக்கு அரசாங்கத்திடமிருந்து ஓட்டுநர் வழங்கப்படாவிட்டால் மட்டுமே ஓட்டுநர் கொடுப்பனவு வழங்கப்படும்) 

 

எரிபொருள் கொடுப்பனவு  

 

பாராளுமன்றத்திலிருந்து ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்ட தேர்தல் மாவட்டத்திற்கான தூரம் மற்றும் ஒவ்வொரு மாதத்தினதும் முதலாவது தினத்தில் 1 லீற்றர் டீசலின் அங்கீகரிக்கப்பட்ட சந்தை விலை ஆகியவற்றின் அடிப்படையில் எரிபொருள் படிகள் செலுத்தப்படுகின்றன (உதாரணம், கொழும்பு 28394 லீற்றர்கள். கம்பஹா மற்றும் களுத்துறை 355.58 லீற்றர்கள்) 

தொலைபேசிக் கொடுப்பனவு 

நிலையான இணைப்பு மற்றும் கையடக்கத் தொலைபேசிக்காக  மாதாந்தம் ரூபா 50,000/= வழங்கப்படுகின்றது. (தொலைபேசி விலைப்பட்டியல்களுக்கான கொடுப்பனவுகளோ அல்லது மீளளிப்புகளோ இல்லை)  

 

தனிப்பட்ட ஊழியர்களுக்கான போக்குவரத்துக் கொடுப்பனவு 

அலுவலகத்தின் 4 தனிப்பட்ட ஊழியர்களுக்கான போக்குவரத்துச் செலவுகளுக்காக மாதாந்தம் ரூபா 10,000/= செலுத்தப்படுகின்றது. (ஒவ்வொருவருக்கும் ரூ. 2,500/= வீதம்) 

 

 

இலவச தபாற்கட்டண வசதிகள் 

 

ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வருடாந்தம் ரூபா 350,000/= பெறுமதியான முத்திரைகள் வழங்கப்படுகின்றன. (காலாண்டிற்கு ரூ. 87,500/=) 

 

குறிப்பு

வரவு செலவுத் திட்டத்தில் சம்பளம் மற்றும் ஊதியங்கள் தனிப்பட்ட ஊதியங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 2022 என்பதே வகைப்பாடுகளுடன் கிடைக்கக்கூடிய சமீபத்திய தரவாகும். இதில்  ரூ.3,248 மில்லியனானது 2022 இன் மொத்த பாராளுமன்ற அமர்வுகளின் எண்ணிக்கையால் வகுக்கப்பட்டுள்ளது,  (101 நாட்கள்).

மூலம்

1. இலங்கை பாராளுமன்றம்.  (n.d.) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் பயன்கள். https://www.parliament.lk/en/members-of-parliament/allowances-and-benefits 

2. நிதி அமைச்சு - இலங்கை.  (n.d.) 2024 அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள்.  

https://www.treasury.gov.lk/web/budget-estimates/section/budget%20estimates%202024 

2024-11-10
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்