31 மே 2024 அன்று, இலங்கையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டன. 92-ஒக்டேன் பெற்றோலின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு, லீட்டர் 355 ரூபாயாக மாற்றப்பட்டது. ஒட்டோ டீசல் ரூபா 16 ஆல் குறைக்கப்பட்டு, லீட்டர் ரூபா 317 ஆக மாறியது.
இந்த குறைப்புக்கள் இருந்தபோதிலும், எரிபொருள் விலை கண்காணிப்பானால் காட்டப்பட்டது போன்று பெற்றோல் மற்றும் டீசலின் தற்போதைய சந்தை விலைகள் எரிபொருள் விலை சூத்திரத்தை விட அதிகமாகவே உள்ளன. ஜூன் 03, 2024 நிலவரப்படி, பெற்றோல் மற்றும் டீசலின் சந்தை விலைகள் சூத்திர விலையை விட முறையே ரூபா 18.43 மற்றும் ரூபா 19.86 அதிகமாக உள்ளன.
பெற்றோலுக்கு ரூபா 27 உம் , டீசலுக்கு ரூபா 17 உம் சூத்திர விலைகள் குறைந்துள்ளன. ஆனால், பெற்றோல் விலையை 13 ரூபாவினாலும், டீசலின் விலையை 16 ரூபாவினாலும் மட்டுமே அரசாங்கம் குறைத்துள்ளது.
மேலும், அரசாங்கம் பெற்றோல் மீது 140 ரூபாவும் மற்றும் டீசல் மீது 106 ரூபாவும் வரி விதிக்கிறது. இந்த வரிகள் நீங்கலாக, ஒரு லீட்டர் பெற்றோலின் விற்பனை கிரயம் ரூபா 197 மற்றும் டீசலுக்கு ரூபா 192 ஆகும்.